முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில்(Tavasikulam) முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா(Vavuniya)- தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பலர் இணைந்து குறித்த கஞ்சி தவசிகுளம் பிரதான வீதியில் வைத்து இன்று (17.05) வழங்கி வைக்கப்பட்டது.
அடுத்த தலைமுறைக்கு
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர்.
15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.
வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
(Vavuniya Tamil News.....)
Tags:
Vavuniya-news



