வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்! Vavuniya News

 

tamil lk news

வவுனியாவில் (Vavuniya) முள்ளிவாய்க்கால் (Mullivaykkal)நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்றையதினம் (18.05.2024) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.



இனப்படுகொலைக்கு நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரை விடுதலை செய்ய கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்