களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹீனடியங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹீனடியங்கல பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றிற்கு அருகில் வேனொன்றில் வந்த முகமூடி அணிந்திருந்த இனந்தெரியாத சிலர் இந்த இளைஞரை பலமாகத் தாக்கிவிட்டு கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Srilnka Tamil News
Tags:
srilanka