கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்...!

 

tamill lk news

அகில  இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் முல்லைத்தீவு மாணவன் சாதனை படைத்துள்ளார்.


முல்லைத்தீவு - துணுக்காய் வலயத்தை சேர்ந்த மு/முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலையை சேர்ந்த மாணவன் ஜெ. விதுசன் இந்த சாதனையை படைத்துள்ளார்.


கடந்த 13ஆம் திகதி, கொழும்பு - தியகம விளையாட்டரங்கில்  நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமான 18 வயது ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்ட போட்டியை 9 நிமிடங்களில் முடித்து 1ஆம் இடத்தை பெற்றுள்ளார்.


இந்நிலையில், போட்டி முடிவடைந்தது மாணவன் வீடு திரும்பிய போது ஊர் மக்கள் கூடி வரவேற்றுள்ளனர்.



ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து அவரது கிராமத்திற்கு ஊர்தியில் மாணவனை ஏற்றி சென்று முத்துஐயன்கட்டு இடதுகரை மக்கள், ஜீவநகர் மக்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாரதி விளையாட்டு கழக இளைஞர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஆகியோர் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்