தாய் மற்றும் பிள்ளைகள் சடலமாக மீட்பு

 

tamil lk news

தென்னிலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


திஸ்ஸமஹாராம, காவந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நீர் நிரம்பிய கல் குவாரியில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.


32 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 09 மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று இரவு குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அத்துடன், இரு பிள்ளை சடலங்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.



நேற்று மதியம் தாயும் இரண்டு பிள்ளைகள் இந்த கல்குவாரியில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.


நீரில் மூழ்கி இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Srilanka Tamil news



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்