கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எனவும், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீதான மேற்கொள்ளும் அச்சுறுத்தல் செயற்ப்பாடுகளை கண்டிக்கத்தக்கது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில் இடம்பெற்றது.
Srilanka Tamil News



