கிளிநொச்சியில் பயங்கர விபத்து...! பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன்!

tamil lk news


 கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மன்னார், நாவற்குழி செல்லும் A-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.



யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Srilanka Tamil News



Previous Post Next Post