ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடி விபத்து சம்பவம் நேற்றிரவு (21-09-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெடிவிபத்தின்போது 70 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர் என்றும், தரைமட்டத்திற்கு கீழே 700 மீட்டர் (2,300 அடி) ஆழத்தில் உள்ள சுரங்கங்களில் 18 பேர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீத்தேன் வாயு கசிவால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


