வவுனியாவில் ஏட்டிக்குபோட்டியாக பலத்தைகாட்டிய அரசியல்வாதிகள்!

 ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்குபோட்டியாக இரண்டு பேரணிகள் இடம்பெற்றிருந்தது.

tamil lk news


அந்தவகையில் குருமண்காட்டில் இருந்து இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானின் ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறும் வைரவளியங்குளம் மைதானத்தை சென்றடைந்திருந்தனர்.


சமநேரத்தில் வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றடைந்தனர்.


இரு பேரணியிலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


 குறித்த பேரணியால் நகரப்பகுதிகளில் கடும்வாகன நெரிசலும் ஏற்ப்பட்டிருந்தது.

Vavuniya Tamil News



Previous Post Next Post