யாழில் பெரும் சோகம்..! நாடாளுமன்ற வேட்பாளர் திடீர் உயிரிழப்பு!

 

tamil lk news

யாழ்ப்பாணம் (Jaffna) வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .


ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார் .




நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர்  இன்று காலை (23)   உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்