வவுனியா - தோணிக்கல் - நாகபூசனி அம்மன் கோவிலில் நடந்த அசம்பாவிதம்; மாயமான நகைகள்!

 

tamil lk news

வவுனியா - தோணிக்கல் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் நுழைந்த விசமிகள் சிலரால் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அம்மனின் நகைகளும் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த மர்ம நபர்கள் சிரட்டைகளை கொண்டு தீ மூட்டி உள்ளனர்.

tamil lk news


அதனை தொடர்ந்து அம்மன் சிலையில் இருந்த வெள்ளித்தாலி ஒன்றினையும்,


சிலையின் கீழ் இருந்த தங்க நகை ஒன்றினையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.




இன்று காலை ஆலயத்திற்கு வந்த பெண்ணொருவர், ஆலயத்தினுள் பெருமளவு புகை மூட்டம் காணப்பட்டத்தால் அச்சத்தில் அயலவர்களை அழைத்துள்ளார்.




அதனை தொடர்ந்து பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்