யாழில் - சுன்னாகத்தில் வாள்வெட்டு தாக்குதல்! ஒருவர் படுகாயம்!

 

tamil lk news

யாழ்ப்பாணம்(Jaffna) - சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


குறித்த சம்பவம், சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு(19.101.2024) இடம்பெற்றுள்ளது.


இதன்போது, இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு தனிப்பட்ட பிரச்சினையே காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




இதேவேளை, யாழில் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட  காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்றையதினம்(20) இடம்பெற்றுள்ளது.




யாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகாமையில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 42 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவரிடமிருந்து10 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.


அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்