தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் வவுனியாவில் அறிமுக நிகழ்வு

tamil lk news


 ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் இன்று வவுனியாவில் (Vavuniya)  இடம்பெற்றது.


கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது கட்சியின் ஸ்தாபகர் உமாமகேஸ்வரனின் திருவுருவப்படத்திற்கு  விளக்கேற்றலுடன்  ஆரம்பமாகியது. 

tamil lk news


இதன்போது வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.




குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வேட்பாளரான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கந்தையா  சிவநேசன், வேட்பாளர் வைரமுத்து திருச்செல்வம், மற்றும்  கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

tamil lk news





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்