ஜனாதிபதி அநுரவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு - காலக்கெடு விதிப்பு

 

tamil lk news

மதுபான சாலைகளின் வரி நாட்டுக்கு முக்கியமானது என இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய மதுபான ஆலைகளுக்கு இனி அனுமதி இல்லை என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.


2023-2024ஆம் ஆண்டுக்கான வரி நிலுவையாக 1.8 பில்லியன் ரூபா உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




நிலுவைத் தொகையை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களின் 2025 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை நீட்டிக்க வேண்டாம் என்று, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.



குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிலுவையை செலுத்தாத உரிமையாளர்களின் அனுமதி பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்