இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை! மக்களுக்கு சலுகை

 நிலவும் அதிக தேங்காய் விலையை கருத்திற்கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக வாகனத்தின் மூலம் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது.

tamil lk news


அதன் முதற்கட்டமாக இன்று முதல் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டை, கடுவலை மாநகர சபைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.




அது தவிர, முக்கிய நகரங்களில், சலுகை அடிப்படையில் தேங்காய் வாங்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.


அதன் பின்னர், அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.




இந்த வாகனத்தில் ஒரு தேங்காய், வாடிக்கையாளர்களுக்கு 100 முதல், 120 ரூபாய் வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்