இலங்கைக்கு வருகை தரவுள்ள சியரா லியோன் ஜனாதிபதி!

tamil lk news


 சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ (Julius Maada Bio) இன்று  இரவு  இலங்கை வரவுள்ளார்.


சமோவாவில் அக்டோபர் 21 முதல் 26 வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு செல்லும் வழியில் அவர் சிறிது நேரம் மட்டுமே இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் நாளை (21) சமோவா செல்லவுள்ளார். 


தனிப்பட்ட முறையில், இந்த விஜயத்தை மேற்கொள்வதால் அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.




எவ்வாறாயினும்இ வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதி பயோவை நாளை முற்பகல்  சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்