காணமலாக்கப்பட்ட உறவுகளுடைய போராட்டத்தில் குழப்பம் விளைவித்த நபர்

 

tamil lk news

வவுனியாவில் இடம்பெற்ற காணமலாக்கப்பட்ட உறவுகளுடைய போராட்டத்தில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தெரிவித்துள்ளது.


குறித்த அமைப்பு இன்று (03.10.2024) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


அதில் மேலும்,



இப்படியான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள், நியாயமான காரணங்களுக்காக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடாத்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்படுகின்றது.


தமிழ் மக்களை மிரட்ட முனையும் இலங்கையின் தேசியப் புலனாய்வளர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.



இவ்வாறான அடக்குமுறைகளை 'அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு' வன்மையாக கண்டிக்கின்றது.


இவற்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இலங்கை அரசும், ஜே.வி.பி கட்சியினரும் தொடர முனையும் பட்சத்தில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தனது ஆதரவாளர்களுடன் காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்