யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பலி!

 

tamil lk news

அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.


மேற்படி மூதாட்டி நேற்று தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மகாவிலாச்சி  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்