இலங்கை போக்குவரத்து சபை பேருந்து இன்று காலை விபத்து; பலர் காயம்!

 

tamil lk news

மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


Girl in a jacket இலங்கையின் முக்கிய பகுதியில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்!



விபத்தின் போது பஸ்ஸில் 15 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்