மாற்றுத்திறனாளிகள் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்!

tamil lk news


 இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று மாற்றுத்திறனாளிகளால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


'உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்' எனும் தொனிப்பொருளில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான  ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகர சபை கலாசாரமண்டபத்தை அடைந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.



ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள், "நம்பிக்கை மனதில் உண்டு நம்பிக்கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.



இந்த நிகழ்வை வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vavuniya News





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்