அலுவலக அடையாள அட்டையுடன் வரும் உத்தியோகத்தருக்கு தகவல் வழங்குமாறு மக்களுக்கு கோரிக்கை!

  

tamil lk news

நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதனால், வீட்டுக்கு வரும் உரிய அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினகே கேட்டுக்கொள்கிறார்.


பிரதேச செயலாளரின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் வரும் உத்தியோகத்தருக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.



 "நீங்கள் வீட்டில் இல்லை என்றால், அதிகாரிகளுக்கு ஒரு தொலைபேசி எண்ணை வழங்கி நீங்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


நீங்கள் வழங்கிய தனிப்பட்ட தகவல்கள் எந்தவொரு வெளி நபர்களின் கைகளிலும் சிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்