வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

 சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.


திருகோணமலை


அதன்படி திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. 


'நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல, முறையான நீதி விசாரணையே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 


'வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், மனித உரிமைகள் இல்லாத நேரத்தில் மனித உரிமைகள் தினம் எதற்கு, சர்வதேச நீதி வேண்டும், வெள்ளைவானில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே, வேலைக்கு சென்ற பாடசாலை சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே?' போன்ற கோசங்களையும்  இதன்போது எழுப்பினர். 



இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி செபஸ்டியன் தேவி,

tamil lk news


முல்லைத்தீவு



அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று   கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.


குறித்த போராட்டத்தின் போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

tamil lk news


யாழ்ப்பாணம்


யாழ் பொதுசன நூலக முன்றலில் காலை 10.30 மணியளவில் இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. 


இதன் போது உள்ளக பொறிமுறையை நிராகரித்து சர்வதேசம் நீதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.



இப் போராட்டத்தில் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

tamil lk news


வவுனியா 


சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்தவகையில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய உறவுகளின் பேரணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் முடிவடைந்தது.



ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அவர்கள்,


இன்று சர்வதேச மனித உரிமைகள் நாளாக உலகம்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. 


சர்வதேசமும் அனைத்துலகமும் ஈழத்தமிழரை கைவிட்ட நிலையில் மனிதர்களாக எம்மை பார்ப்பதில்லை


எந்த உரிமையும் வழங்கப்படவில்லை? நமக்கு சர்வதேச நீதிவருமா? என்ற கோள்வியோடு இந்த தினத்தில் நாம் போராடிவருகிறோம்.


உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லாத நிலையில் ஐ.நா அனைத்துலக சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகளின் அவையின் கீழ், சர்வதேசநீதிப் பொறிமுறையை நாடிநிற்கின்றோம். 



இன்று குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வரிசையில்  இலங்கை சர்வதேசரீதியில் முதலாம் இடத்தில் இருக்கின்றது. 


எமது 40ற்கு மேற்பட்ட குழந்தைகளின் முகங்கள் இன்றும் எம் கண்முன்னே அழியாத உயிர்ப்புக்களாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. 


இறுதிப்போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வரிசையில் இந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்ற விம்மலும் கண்ணீரும் இன்னும் எம்மை வருத்துகின்றது. எமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை நாம் சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.


இது அன்னையர் தினமோ, ஆசிரியர் தினமோ எனக்கூறி கடந்து செல்ல முடியாது. இது மனித உரிமைகள் தினம். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். 


எம் உயிருக்கும் மேலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டுப்போராடிக் கொண்டிருக்கும் எம்மையும் மதிக்க வேண்டும்.  மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். 


ஆனால் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர், இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய முன்னூறுக்கும் அதிகமான உறவுகள் உயிரிழந்துளள்னர். அவர்களின் உறவுகளை இனி யார் தேடுவது.



எப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கிடைத்து எம்மைப்போல் அழுபவர்களின் குரல்ஓய்கிறதோ, அன்றுதான் எமக்கு மனித உரிமைகள் தினம். - என்றனர்.

tamil lk news


மன்னார்


மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை   மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.


மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் ஈடுபட்டனர்.


குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் தெரிவிக்கையில்

tamil lk news


கிளிநொச்சி


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு பேரணி காக்கா கடை சந்திவரை முன்னெடுக்கப்பட்டது.

tamil lk news


மட்டக்களப்பு


காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது கொலைகாரர்களால் நீதி வழங்க முடியுமா? எமது உரிமை எமது எதிர்காலம் எப்போது? எமது உறவுகள் எங்கே? என பல வாசகங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பியவாறு  ஊர்வலம் ஆரம்பமாகி நகர் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தையடைந்து காந்திபூங்காவை சென்றடைந்தது.


அதனை தொடர்ந்து காந்திபூங்காவில் நீதி கோரி ஆர்பாட்டம் இடம்பெற்றது.



இதன்போது நாடாளுமன்ற  உறுப்பினர்  இ.சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் பா.அரியேந்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறுவுகள் கலந்துகொண்டனர்.

tamil lk news


அம்பாறை



மனித உரிமை தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்ட்டித்து அம்பாறை மாவட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடைபெற்றது


இதில் 150க்கு மேற்ப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  கலந்துகொண்டனர்.

tamil lk news

tamil lk news




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்