அவுஸ்திரேலிய தாதியர்கள் இஸ்ரேலிய நோயாளிக்கு மிரட்டல்

  அவுஸ்ரேலியாவின் சிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய தாதியர்கள் இஸ்ரேலிய நோயாளிக்கு மிரட்டல் - Australian nurses threaten Israeli patient


கண்டனம் 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலிய நபர்கள், இஸ்ரேலிய ஆலயங்கள் மற்றும் சொத்துக்களுக்கு எதிரான தான்குதல்களின் அலையைத் தொடர்ந்து, வெறுப்பு குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அவுஸ்திரேலியா இயற்றிய ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் வந்துள்ளது.


நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் புதன்கிழமை (12) வீடியோவுடன் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, இருவரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் கூறினார். மேலும் அவர்கள் இனி நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைப்பில் பணியாற்ற மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.



இந்த வீடியோவை டிக்டோக்கில் உள்ளடக்கத்தை உருவாக்கிய மேக்ஸ் வெய்ஃபர் பகிர்ந்துள்ளார், அவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்.


அந்த வீடியோவில் தாதியர்கள், “நீ இஸ்ரேலியன் என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இறுதியாக நீ கொல்லப்பட்டு நரகத்திற்கு போகப் போகிறாய்” என்று கூறியுள்ளனர்.


தான் ஏன் கொல்லப்பட வேண்டும் என்று வெய்ஃபர் கேட்டபோது, ​​மருத்துவ உடையில் இருந்த அந்தப் பெண், “இது பாலஸ்தீனத்தின் நாடு, உங்கள் நாடு அல்ல” என்று கூறி, ஆபாசமாகப் பேசினார்.


மேலும் அந்தப் பெண், தான் எந்த யூத நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என்றும், அவர்களைக் கொன்றுவிடுவேன் என்றும் கூறினார். டிக்டோக்கில் பெரும்பாலும் மத்திய கிழக்கு பற்றிய வீடியோக்களை தவறாமல் இடுகையிடும் மேக்ஸ் வீஃபருக்கு 102,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.



மேலும், அவரது வீடியோக்கள் 4.2 மில்லியன் பயனர்களால் விரும்பப்பட்டுள்ளன. 2023 அக்டோபரில் இஸ்ரேல்-காசா போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் ஜெப ஆலயங்கள், கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.


இது அவுஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட 115,000 யூத மக்களிடையே அச்சத்தைத் தூண்டியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்