Vvauniya Tamil News
வவுனியா (Vavuniya) சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மர நடுகை இன்று இடம்பெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு
வவுனியாவின் முன்னனி தேசியப் பாடசாலையான வவுனியா மகாவித்தியாலயத்தின் மைதானத்தின் எல்லையோரங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பயன்தரு மற்றும் நிழல் தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன், சமுதாய பொலிஸ் குழு பொறுப்பதிகாரி ஹேரத், பிரதி அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், சாரணர் குழுக்கள், மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.
