இலங்கைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

  Srilanka News Tamil

இலங்கைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்!-Actor Sivakarthikeyan has arrived in Sri Lanka!


சுதா கொங்கரா இயக்கும் "பராசக்தி" திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 


அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.


பராசக்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. 



அதைத் தொடர்ந்து, மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர். முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாகச் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், பராசக்தியின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. 



இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகை தந்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்