மாதம்பே கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது..!

 Srilanka News Tamil

மாதம்பே கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது..!Details of the victims of the Madambay Gora accident have been released..!


 மாதம்பே கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​நேற்று மாலை (09) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.



விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


 இறந்தவர்கள் 32, 36 வயதுடைய பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை என்பதோடு அனைவரும் மினுவங்கொட மற்றும் ராகமவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.



 விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்