யாழில் யூடியூபர் கிருஷ்ணாவை மடக்கிப்பிடித்த மக்கள்

 Srilanka News Tamil 

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா இன்று முற்பகல் பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.


பண்டத்தரிப்பு  பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு,  இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.

யாழில் யூடியூபர் கிருஷ்ணாவை மடக்கிப்பிடித்த மக்கள்-People in Jaffna held YouTuber Krishna hostage


உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் வகையிலான யூடியுப் தளம் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்ற குறித்த நபர், பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 



இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த நபருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.



இந்தநிலையில், குறித்த காணொளியில் காண்பிக்கப்படும் குடும்பத்தினரின் வீட்டுக்கு அந்த யூடியூபர் இன்றையதினம் வருகைத் தந்திருந்த நிலையில்,   ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Jaffna News Tamil

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்