நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை; அரசு விளக்கம்

Tamil lk News

  ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. 


இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


இதன்போது களுவாஞ்சிக்குடியிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


Tamil lk News


இந்நிலையில்  எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 



மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 



எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்