Vavuniya News
வடமாகாணத்தில் கடந்த 2007ம் ஆண்டு என்.சிவநேசன் என்பவரால் நிலைநாட்டப்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டியை 4நிமிடம் 12.07 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 18 வருடங்களின் பின்னர் நேற்று (20.07) இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் ஒட்டப் போட்டியில் 4நிமிடம் 10.09 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து பழைய சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.

ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம் ! அச்சத்தில் பயணிகள்....!
மேலும் கடந்த 2024ம் ஆண்டு இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1 நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்து 11வருட சாதனையினை சமன் செய்த அவர் இம்முறை 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1 நிமிடம் 58.07 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து தன்னால் நிலைநாட்டப்பட்ட சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை படைத்துள்ளார்.
வடமாகாண மாகாண விளையாட்டு பெருவிழாவானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (20.07)இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் போதே பயிற்சிவிப்பாளர் குமார் நவநீதன் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் இச் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.
