சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி

  

Tamil lk News



2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகின. 



வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் முழுமையான பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.



 இதனடிப்படையில், குறித்த பாடசாலையி்ல் பரீட்சைக்குத் தோற்றிய 265 மாணவர்களுள் 181 மாணவர்கள் அதி சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளனர்.



 இவர்களுள் 120 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் 36 மாணவர்கள் 8ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.


மேலும் 25 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளதோடு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்