வவுனியாவில் வீதியோரத்தில் குப்பைகளை கொட்டும் நபர்கள் - விடுத்த எச்சரிக்கை !

  

Tamil lk News

வவுனியா (Vavuniya) - மன்னார் வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தினசரி பலர் குப்பைக்கழிவுகளை வீசிவருவதினால் அவ்விடத்தின் சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.


இந்நிலையில் இன்றையதினம் அவ்விடத்தில் பட்டா ரக வாகனத்தில் வருகை தந்த நபரொருவர் வாகனத்திலிருந்த குப்பைகளை குறித்த வீதியில் வீசியுள்ளார். 



இதனை அவ்வீதியுடாக சென்ற இளைஞர்கள் அவதானித்து குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தமையுடன் வீசிய குப்பைகளை மீள எடுத்துச்செல்லுமாறும் பணித்திருந்தமையுடன் அவர் குப்பைகளை எடுத்துச்செல்லும் வரை அவ்விடத்தில் நின்றனர்.



எனவே குறித்த பகுதியில் வீதியோரமாக குப்பைகள் வீசப்படுவதினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்