அண்டார்டிக் பனிக்கட்டிகள் உருகுவது உலகளாவிய உயிர்வாழ்வை சீர்குலைக்கிறது



ஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், கடல்வாழ் உயிரினங்களின் உயிர்வாழ்விற்கான அத்தியாவசிய வெப்பநிலை, ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஊட்டச்சத்துக்களை விநியோகிக்கும் ஆழ்கடல் நீர் அலைகளின் ஓட்டம் வேகமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.


2050ம் ஆண்டுக்குள் உலகின் இருப்புக்கு இன்றியமையாத காரணியாக கருதப்படும் ஆழ்கடல் நீர் அலைகளை ஏற்படுத்தும் ஆழ்கடல் நீர் ஓட்டம் சுமார் 40 சதவீதம் குறையும் என விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.


 அண்டார்டிக் பனி மலைகள் உருகும் வேகத்துடன், ஆழ்கடல் நீர் அலைகளின் ஓட்டம் வலுவிழப்பதால், ஐரோப்பாவில் மிகவும் குளிர்ந்த காலநிலையும், உப்புத்தன்மையும் ஏற்படும் என ஆய்வை மேற்கொண்ட ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. கடல் நீர் குறைந்து கடல் நீர் அடர்த்தியாகிவிடும்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்