ஹெராயின் வைத்திருந்தால் ஆயுள் தண்டனை

 

tamillk news

ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


2.53 கிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளார்.


2014ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி கொழும்பு தொட்டலக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2.53 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


பிரதிவாதிக்கு முன்னைய குற்றச்சாட்டுகள் இருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், 43 வயதான பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்