வவுனியாவில் மதுபோதையில் வந்த விசேட அதிரடி படையினர் இருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதி (vavuniya tamil news)

tamillk.com


வவுனியாவில் கனகராயன்குளம் விஞ்ஞானகுளம் பகுதியில் விசேட அதிரடி படையினரால் (25.03.203) இருவர் தாக்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக

வவுனியா மரையடித்தகுளம்,செங்கராத்திமோட்டை பகுதியில் தங்களது காணிகளை துப்புரவு செய்த வேளையில் அங்கு வந்த விசேட அதிரடி படையினர் குறித்த காணி வனஇலகாவிற்கு சொந்தமானது இவ்விடத்தை துப்புரவு செய்ய வேண்டாம் என தடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்ற போது அவர் வனஇலாகவுடன் தொடர்பு கொண்ட பின்பு இந்த காணியானது விடுவிக்கப்பட்ட காணி என தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் விசேட அதிரடி படையினர் மாலை வேளையில் மது போதையுடன் சிவில் உடையில் காணி உரிமையாளர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களை தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகள் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலை பொலிஸரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டவர்கள் சச்சிதானந்தன் சதாநந்தன் (35) சிற்றம்பலம் கேதீஸ்வரன் (50)


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்