கையடக்க தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!

tamillk.com


தொலைபேசி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து வர்த்தக உரிமம் இல்லாமல் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில் 99 சதவீத இடங்களில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து வர்த்தக உரிமம் பெறவில்லை எனவும் தெரிவித்த அவர் தொலைத்தொடர்பான தொலைபேசி உபகரணங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வர்த்தக உரிமம் பெற வேண்டும்.

ஆனால் நாட்டில் பல பகுதிகளில் வர்த்தக உரிமம் பெறாமல் தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் விசாரணையை நடத்துவது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

தற்போது உரிமம் இல்லாமல் தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்யும் இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி அந்த இடங்களில் உள்ள பொலிஸ்  நிலையங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்