அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று (03) இன்று (04) நண்பகல் 12.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவும், ஏப்ரல் 10 ஆம் திகதி பேரணியை நடத்தவும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை, புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், தேசிய வளங்களை விற்பனை செய்வதை நிறுத்துதல், வாழ்வாதார கொடுப்பனவு பெறுதல், தொழிற்சங்கங்களை நசுக்குதல் போன்றவற்றுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் குழு உறுப்பினர் திரு.மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பல கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக தீர்மானம் எடுக்கும் நோக்கில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இக்கலந்துரையாடல் ஆரம்பமானதுடன் பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டமையினால் 02 மணித்தியாலங்களுக்கு மேலாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல அரச, அரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



