இத்தாலியத் தீவான சிசிலியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அதிக அளவு கோகோயின் மிதப்பதை இத்தாலிய காவல்துறை கண்டுபிடித்ததாக CNN தெரிவித்துள்ளது. 2 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள கொக்கைன் கையிருப்பின் பெறுமதி 440 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என அந்நாட்டு நிதிப் பொலிஸார் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் கையிருப்பு மிக நுணுக்கமாக சீல் வைக்கப்பட்டு, கடத்தல்காரர்களால் கண்டுபிடிக்கப்படும் வகையில் மின் சமிக்ஞை அமைப்பு பொருத்தப்பட்டதாகவும், அதில் 70 கொக்கேய்ன் பொதிகள் நீர் புகாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



