யாழ்ப்பாணத்தில் கஸ்தூரி வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு குண்டு ஒன்றை நேற்று இரவு வீசியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது இந்த குண்டு வீசப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வீசப்பட்ட வெடி குண்டானது உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இந்த சம்பவ தொடர்பான மேலதிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Tags:
jaffna



