(vavuniya tamil news)
வவுனியா வெடுக்குநாறி மழையில் அமைந்திருந்த ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தின் விக்கிரங்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என வவுனியா மாவட்ட நீதிமன்றம் (27) உத்தரவு வழங்கியுள்ளது.
இதேவேளை ஆரியலிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தவர்கள் யார் என்பதை உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது வேண்டுமென்றும் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என உத்தரவிட்ட நீதிமன்றம், இதன் வழக்கு விசாரணைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கான திருவுருவ சிலைகள் மற்றும் பூஜை பொருட்களாகியவை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதை நீதிமன்றத்திற்கு தெரிவித்ததை அடுத்து, தொடர்பாக ஆராய்ந்த நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரங்கள் அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும் அத்தோடு பூஜை பொருட்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் வெடுக்குநாறி மலையில் திருவுருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என நீதான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்கு இடம்பெறும் பூஜைகளுக்கான இவ்வித இடையூறுகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.



