வடமேற்கு மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணகொட நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
வசந்த கர்ணகொட மற்றும் அவரது மனைவி திருமதி அசோகா கர்ணகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் திரு.அன்டனி ஜே.பிளிங்கன் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து வசந்த கர்ணகொடவிற்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



