யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்றால் ஒருவர் மரணம்!

tamillk.com

(jaffna tamil news)

மீண்டும் இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று (21.04.2023) இரவு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இறந்தவர் கடந்த 15.04.2023 திகதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் கடுமையான மூச்சு திணறலாலும் தொற்றின்  தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த சடலம் உரிய முறையில் பொதி செய்யப்பட்டு உறவினர்களுக்கான இறுதி சடங்குகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சுகாதார அமைச்சர் சுற்றறிக்கை அமைய சடலம் வெளியே எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்படாது என யாழ் போதனா  வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் கோவிட் குறித்து ஐந்து நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கோவிட் பரிசோதனை நடத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் அறிவித்திருப்பதால் மேலும் நோய் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா  வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்