தொழில்நுட்பம் கோளாறு காரணமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

tamillk.com


இன்று(8) காலை 9.30 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு மணித்தியாலமும் 10 நிமிடத்திற்கு பின்னர் 10.40 மணியளவில் மீண்டும் கட்டுனாயாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானியின் முன்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது இந்த விமானத்தில் பயணிகளாக 189 பேரும் மற்றும் பணியாளர்களாக 15 பேரும் இருந்துள்ளனர்.


 பயணிகள் அனைவரையும் இன்று மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாற்று விமானத்தில் துபாய் புறப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்