நேற்று தெற்கு லெபனான் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் 34 ராக்கெட்டுகளை வீசியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர் காஸா பகுதியில் உள்ள போராளிகள் மேலும் டஜன் கணக்கான ராக்கெட்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இரண்டு இரவுகளில் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது.
லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.