காதலி மீது சந்தேகத்தில் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் காதலி யுவாதியுடன் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் காதலி பொலிஸ் உத்தியோகத்தருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதாக தவறாக சந்தேகநபர் புரிந்து கொண்டு தாக்குதலை நடத்திய உள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



