வெடுக்குநாறி மலையில் சிலைகளை வைப்பதில் குழப்ப நிலை ஏற்பட்டது

tamillk.com

(vavuniya tamil news)

வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்றைய தினம் வெடுக்குநாறி மலையில் சிலைகளை வைப்பதற்கு பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர்  தடையை ஏற்படுத்தியுள்ளார்.

ஆலய தரப்பினார்கள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்வதற்கான வேலைகளை இன்று காலை முன்னெடுத்த போது வருகை தந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த சிலைகளை வைப்பதற்கு தடையை ஏற்படுத்தினர்.

குறித்த மலையில் புதிய விக்ரங்களை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அவற்றை வைப்பதற்கு தடை ஏற்படுத்திய போது குழப்பநிலை ஏற்பட்டது ஏற்கனவே இருந்த சிலைகளை வைக்கும்படியும் அவர்கள் கூறினார்கள்.

இதற்கு ஆலய தரப்பினர்கள் ஏற்கனவே இருந்த சிலைகள் அனைத்தும் உடைந்து காணப்படுவதாகவும் மற்றும் களவாடப்பட்டுள்ளதாகவும் இவற்றை சமய வழிபாட்டுக்கு அமைய இவற்றை வைப்பது முறையான செயற்பாடு இல்லை என்று தெரிவித்தனர்.

இதன் போது அதிகாரிகளுக்கும் ஆலய தரப்பினர்களுக்கும் இடையிலான சற்று நேரம் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.

எனினும் சிறிது நேரத்திற்கு பின்னர் திட்டமிட்டபடி அனைத்து விக்கிறங்களும் வைக்கப்பட்டது.

tamillk.com


இவ்வாறு இருக்கையில் இன்றைய தினத்தில் ஆலய வளாகத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸ் உத்தியோதரர்களும் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் தங்களது பாதனிகளை களற்றாமல் ஆலய சூழலுக்குள் நின்றமையை அங்கிருந்த பொதுமக்கள் விசனமடைந்ததோடு உயர் விடயங்களில் ஒழுங்கின்மையாண்க நடந்து கொண்டமைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்