மட்டக்களப்பில் மாவட்டத்தின் மண் முனை வடக்கு காத்தான்குடி வாழைச்சேனை மத்திய பிரதே செயலக பகுதிகளில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இவேளை கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையில் 700 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போன்று 22 வயதுடைய இளைஞன் ஒருவரும் மரணம் அடைந்துள்ளார் என தெரிவித்தார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரித்து வருவதால் இந்த டெங்கு நோய்களை அழிப்பதற்கான விசிட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாவட்ட ரீதியாகவும் இடம்பெற்று வருகின்றன. ஆகையால் ஒத்துழைப்பு வழங்காது இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
srilanka



