மீண்டும் ஒரு மோதல் வடக்கு - கிழக்கில் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக ஐ நாவிடம்: சுமந்திரன் கூறினார்(jafnna tamil news)

jaffna tamil news

(jaffna tamil news)

வட-கிழக்கு மாகாணங்களில் இருக்கும் காணிகள் அபகரிப்பு, தொல்பொருள் வளங்களை சுரண்டும் செயல்பாடுகளினால் மீண்டுமொரு மோதல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய நாட்டு சபையின் பிரதிநிதிகள் இடம் சுட்டிக்காட்டி காட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன்.

இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும் படி ஐ.நா அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வர்ட் ரீஸ் மற்றும் ஐக்கிய நாடு அபிவிருத்திச்செயல் திட்டத்தின் விசேட பிரதிநிதி சனா ரஸ்ஸல ஆகியோரின் சந்திப்பில் இவ்விடயம் ஆராயப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பின்போது இலங்கையில் சமாதானத்தையும் அமைதியையும் நிலை நாட்டுவதற்கான திட்டங்களையும் அத்துடன்  முன்னெடுக்கப்படும் மோதல் தடுப்பு செயல் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்து உரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மேலும் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான செயல் திட்டங்களை முன்னர் செயல்பட்டது போல் இனிவரும் காலங்களிலும் முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில்  காணிகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் அதேபோன்று தொல்பொருள் முக்கியம் வாய்ந்த பகுதிகளில் அழிக்கப்படுவது. என்பதை பற்றி ஐநா அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய எம். சுரேந்திரன் இவ்வாறான செயல்பாடு தொடரும் பட்சத்தில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதற்கான சாத்தியம் உருவாக காணப்படுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அரசாங்கத்திடம் ஐ.நா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மேற்குறிப்பிட்டவாறான முறையற்ற செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்த வேண்டும் என்றும் சுமத்துடன் கேட்டுக்கொண்டார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்