வடக்கு , கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றின் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
லிசியோ ஆன்டியோக்வேனோ உயர் பாடசாலையின் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கரீபியன் நகரமான டோலுவிலிருந்து மெடலினுக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 5.40 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த 20 பேரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


