( srilanka tamil news-tamillk ) ஜனாதிதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை திறந்து வைக்கப்படவிருந்த அரநாயக்க அசுபினெல்ல நீர் திட்டத்திற்கு சொந்தமான பெருமளவிலான நீர் குழாய்கள் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு லட்சக்கணக்கான தண்ணீர் குழாய்கள் இருந்ததாக பொறியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நீர் குழாய்கள் அரநாயக்க உஸ்ஸாபிட்டிய பொது விளையாட்டு மைதானத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த வேளையில் தீ பரவியதாகவும், அரநாயக்க அசுபினியெல்ல நீர் திட்டத்திற்கு சொந்தமான அனைத்து நீர் குழாய்களும் அங்கிருந்ததாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka



