( srilanka tamil news-tamillk ) வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஏரியில் இருந்து முப்பத்தொரு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் கண்டி பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
அந்த பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொன்று ஏரியில் வீசினார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பிட்டிய பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த அச்சல குமாரி பண்டார என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு 10 மற்றும் 5 வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே மரணம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால், பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.